ஐபிஎல் தொடரில் 29-வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்த நிலையில், மும்பை அணி 186 ரன்கள் எடுத்திருந்தது.

இப்போட்டியின் கடைசி ஓவரில் களம் இறங்கிய தோனி 4 பந்தில் 20 ரன்கள் எடுத்திருந்தார். 20 ஓவர்கள் முடிந்த நிலையில் தோனி ஓய்வறையை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் போது அவர் சிக்ஸர் அடித்த பந்து படியில் கிடந்தது. அந்த பந்தை எடுத்து தோனி குட்டி ரசிகை ஒருவருக்கு பரிசாக கொடுத்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.