
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 3 பெண்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சட்டபூர்வமான ஆதாரங்கள் இல்லாமல் ரோஷிதா பேகம் (29), தன்ஷீலா காத்தூன்(22), ஷேபாலி பேகம் (23) ஆகியோர் தங்கி இருப்பது தெரியவந்தது. அவர்கள் பிழைப்புக்காக இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டு வேலைகளை செய்துள்ளனர். இதனால் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர்.