செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலச்சேரி கிராமத்தில் மணிகண்டன் (28)-ஜாய்ஸ் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆல்வின் ஜோ என்ற 4 வயது மகனும் அகஸ்டின் என்ற ஒரு வயது மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று ஒரு வயது குழந்தையான அகஷ்டினுக்கு ஜாய்ஸ் வெளியே அமர்ந்து சாப்பாடு ஊட்டி விட்ட நிலையில் பின்னர் வீட்டுக்குள் சென்று வீட்டை வெளியே வந்து பார்த்தார்.

அப்போது அகஸ்டினை காணவில்லை. அப்போது குழந்தையை தேடிய போது வீட்டின் அருகே இருந்த ஒரு தண்ணீர் வாளியில் குழந்தை தலைக்குப்பிற கவிழ்ந்து கிடந்துள்ளது. உடனடியாக குழந்தையை வைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டது. மேலும் இந்த சகோதரனாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.