பிரபல இயக்குனரும் நடிகருமான சதீஷ் கவுசிக் கடந்த மார்ச் ஒன்பதாம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறுதியாக பேசியது  ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. பாலிவுட் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக புகழ் பெற்றவர் தான் சதீஷ் கௌஷிக். இவர் கடந்த மார்ச் 9ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

இந்த செய்தி பலரையும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவரின் கடைசி வார்த்தைகளை மேலாளர் சந்தோஷ் வெளிப்படுத்தியுள்ளார். மருத்துவமனை சென்றபோது, சந்தோஷ் என்னை காப்பாற்று, நான் சாக விரும்பவில்லை, என் மகளுடன் வாழ வேண்டும், பிழைக்க மாட்டேன் என நினைக்கிறேன், மகள்களை பார்த்துக் கொள், என்று சொன்னதாக உருக்கமாக அவர் தெரிவித்துள்ளார்.