தெலுங்கு நடிகர்கள் சிலர் அண்மை காலமாக சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர். தெலுங்கு திரைப்படங்கள் தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளிலும் பான் இந்தியா படங்களாக வெளியாவதால் அவர்கள் கூடுதல் சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதிகமான சம்பளம் பெறும் தெலுங்கு நடிகர்கள் பட்டியலில் பிரபாஸ் முதலிடத்தில் இருந்தார். இவர் ஒரு திரைப்படத்துக்கு ரூ.100 கோடி வாங்கினார். பாகுபலி படத்துக்கு அடுத்து பிரபாஸ் மார்க்கெட் எகிறியதே சம்பள உயர்வுக்கு காரணம் ஆகும்.
இதனிடையே பிரபாஸ் நடித்த தெலுங்கு திரைப்படங்களை அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் சம்பளத்தினை அல்லு அர்ஜுன் முறியடித்திருக்கிறார். இந்தி படம் ஒன்றில் இவரை ஒப்பந்தம் செய்த நிலையில், இப்படத்தில் நடிப்பதற்கு ரூபாய்.125 கோடியை சம்பளம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது அல்லு அர்ஜுன் புஷ்பா 2ம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.