சபரிமலை ஐயப்பன் கோவில் சீசனை முன்னிட்டு விசாகப்பட்டினம் முதல் கொல்லம்பாறை இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து ஜனவரி 22ஆம் தேதி மாலை 3.50 மணிக்கு புறப்படும் சபரிமலை சிறப்பு அதிவிரைவு ரயில் மறுநாள் மாலை 6 மணிக்கு கொல்லம் சென்றடையும்.

அதன் பிறகு ஜனவரி 23ஆம் தேதி கொல்லத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஜனவரி 25ஆம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு விசாகப்பட்டினம் வந்தடையும். இந்த ரயில், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக இயக்கப்படும் எனவும் இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.