பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சிறந்த பலனை கொடுக்கும் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் வட்டி விகிதத்தில் ஜனவரி-மார்ச் 2023 காலாண்டில் எந்த வித மாற்றமும் இல்லை. தற்போது இத்திட்டத்தில் உங்களுக்கு 7.6% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில், அந்த குழந்தையின் பெற்றோர் (அ) பாதுகாவலர் கணக்கை துவங்கலாம். எந்தவொரு வங்கி (அ) தபால் அலுவலகத்திலும் நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை திறந்து கொள்ளலாம்.

இக்கணக்கை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பிற வங்கி கிளைகள் (அ) தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றிக் கொள்ளலாம். இதில் மொத்த முதலீட்டு காலம் 15 வருடங்கள் மற்றும் மொத்த முதிர்வுகாலம் 21 ஆண்டுகள் ஆகும். இக்கணக்கை திறக்கும் போது குறைந்தபட்ச தொகையாக ரூபாய்.250ஐ டெபாசிட் செய்யலாம். டெபாசிட் செய்வோர் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சமாக ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

அதே நேரம் இந்த கணக்கில் குறைந்தபட்சம் தொகையை நீங்கள் பராமரிக்கவில்லை எனில், உங்களுக்கு ரூபாய்.50 அபராதமாக விதிக்கப்படும். நீங்கள் இத்திட்டத்தில் கணக்கை திறந்தால் அந்த குழந்தைக்கு 21 வயதாகும்போது உங்களது முதலீடு ரூபாய். 1,80,000 ஆக இருக்கும். அத்துடன் உங்களுக்கு வட்டியாக ரூபாய். 3,47,445 கிடைக்கப் பெறும். இத்திட்டத்தில் 21 ஆண்டுகால முதிற்சிக்கு பின் உங்களுக்கு மொத்தமாக ரூபாய்.5,27,445 கிடைக்கும்..