சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வருடம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஆன்லைன் புக்கிங் செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் சபரிமலை பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகிறது.

இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், வருகிற நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பம்பை முதல் சன்னிதானம் வரை எந்த ஒரு இடத்திலும் பக்தர்கள் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தீயினால் ஏற்படும் விபத்தை தடுக்க, சமையல் பாத்திரங்களை சன்னிதானத்திற்கு கொண்டு செல்ல தடை. இந்த தடையை மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.