தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இன்று மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் தற்போது திடீரென மழை வெளுத்து வாங்குகிறது. அதாவது சென்னையில் இன்று பிற்பகல் வரை வெயில் அடித்த நிலையில் தற்போது திடீரென காலநிலை மாறி மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னை கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், மதுரவாயல், ராமாபுரம், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து. அதன் பிறகு முடிச்சூர், வண்டலூர், சேலையூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது