இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிரடியாக உயர்த்தது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த குறிப்பிட்ட பொருட்களின் ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்தது. இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அரிசியின் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.அதன்படி அரிசி போன்ற பொருட்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்த நிலையில் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளதால் கோடை விளைச்சல் சந்தைக்கு வர தொடங்கியுள்ளதால் அரிசியின் விலை குறைய தொடங்கியுள்ளது. அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்து வருகின்றது. அதன்படி ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு 8 ரூபாய் வரை குறைந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.