இந்தியாவில் மருந்துகளின் விலையை நிர்ணயம் செய்வதில் தேசிய மருந்துகளை நிர்ணய ஆணையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சமீபத்தில் வெளியீட்டு உள்ள அறிவிப்பின்படி தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள குறிப்பிட்ட மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக பயன்படுத்தும் வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் நீரிழிவு மருந்துகள் ஆகிய மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

உதாரணமாக ஒரு யூனிட் (ஊசி 150 IU / ML) ரேபிஸ் இம்யூனோகுளோபுலின் மருந்தானது ரூ.3,454 க்கும், ஒரு யூனிட் (ஊசி 150 IU / ML) டெட்டனஸ் இம்யூனோகுளோபுலின் மருந்தானது ரூ.1,383.6 க்கும், ஒரு யூனிட் (ஊசி 250 IU / ML) அமிகாசின் ரூ.54.2 க்கும் விற்பனைஆகும்.  இவ்விலை உயர்வு  ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.