தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், அப்போது அரசின் உரையைப் படிக்காமல் ஆளுநர் புறக்கணித்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அரசின் முறையை முழுமையாக வாசித்தார். இந்த நிலையில் சபாநாயகர் வாசித்து முடிக்கும் வரை அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஆளுநர் அவை நிறைவடையும் முன்பே அங்கிருந்து வெளியேறினார். அதன் பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்ட இன்றைய அவை அலுவல்கள் நிறைவு பெற்றது. ஆளுநர் தனது வாகனத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டார்.