துருக்கி-சிரியா எல்லை பகுதியில் பிப்ரவரி 6ம் தேதி அன்று பயங்கர நிலநடுக்கம் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. மேலும் ஒரு நிலநடுக்கமும், 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கமும் ஏற்பட்டது. நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கப் பாதிப்பில் துருக்கி, சிரியாவில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதுவரை பலியானோர் எண்ணிக்கை 46,000ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையில் துருக்கியை போல் இந்தியாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்தில் எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் தான், அண்டை மாநிலங்களான தெலங்கானா, ஆந்திராவிலும் சமீபத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், அடுத்து தமிழகத்தில் நிலநடுக்கம் வருமா என மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து நிபுணர்கள், தமிழ்நாட்டில் பெரும் சேதத்தை விளைவிக்கும் நிலநடுக்கம் வர வாய்ப்பில்லை என விளக்கமளித்துள்ளனர்.