டெல்லியின் ஆர்கே புரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அம்பேத்கார் பஸ்தி பகுதியில் நபர் ஒருவருக்கும், சிலருக்கும் இடையில் பணத்தகராறில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நபரை தாக்கும் நோக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர். எனினும் அவர் அந்த இடத்தில் இல்லை.

இதன் காரணமாக கோபமடைந்த அவர்கள் அந்நபரின் இரண்டு சகோதரிகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இறந்தவர்கள் பிங்கி(30) மற்றும் ஜோதி(29) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.