இமாசலப்பிரதேசத்தின் சிம்லா நகரில் ஸ்ரீ திகம்பர் ஜெயின் சபை சார்பாக இயங்கும் சமூகம் சார்ந்த பிரபல கோவில் ஒன்று இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த அந்த கோவிலின் வெளியில் அண்மையில் நோட்டீஸ் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், புதிய ஆடை விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் கண்ணியம் வாய்ந்த உடைகளை கோவிலுக்கு அணிந்துவர வேண்டும். குட்டையான ஆடைகள், அரை கால் சட்டைகள், பெர்முடா, மினி ஸ்கர்ட், இரவு ஆடைகள், கிழிந்த ஜீன்ஸ், பிராக் ஆகிய ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவில் வளாகங்களுக்கு வெளியில் மட்டுமே இறைவணக்கம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.