நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.88,000 கோடி மதிப்பிலான ரூ.500 நோட்டுகள் காணாமல் போனதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, கரன்சி நோட்டுகள் குறித்த விளக்கம் தவறு என்றும், அச்சகங்களில் அச்சிடப்பட்ட அனைத்து நோட்டுகளும் ரிசர்வ் வங்கிக்கு வந்துவிட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016 டிசம்பர் வரையில் நாசிக் ரூபாய் நோட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளில், 88,032.5 கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் காணாமல்போனதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.