திண்டுக்கல்லில் உள்ள கொடைக்கானலில் உலகப்புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் வருடம் முழுவதும் அனைத்து பருவங்களிலும் இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மோயார் சதுக்கம், பைன் மர சோலை , பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் அதிகளவு கண்டு ரசிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்து சில நாட்களுக்கு முன்பு மோயார் சதுக்கம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக கடந்த மூன்று நாட்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது இன்று செப்டம்பர் 22ஆம் தேதி முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல அந்த பகுதியை பார்வையிடலாம் என்று வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.