
கேரளா மாநிலத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகள் மாதவிடாய் மற்றும் மகப்பேறு காலங்களில் விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதாவது மாணவிகள் விடுப்பு எடுக்கும் போது வருகை பதிவேடு குறைவதாலேயே இது போன்ற கோரிக்கையை விடுத்தனர். இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு மாணவிகளுக்கு 73 சதவீதம் வருகை பதிவேடு இருந்தால் போதுமானது.
செமஸ்டர் தேர்வு எழுதலாம் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரள உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் விடுப்பு மற்றும் 18 வயதை கடந்த மாணவிகளுக்கு அதிகபட்சமாக 60 நாட்கள் மகப்பேறு விடும் வழங்கப்படும் என கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர். பிந்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இது குறித்து கேரள மாநிலம் முதல்வர் இத்தகைய உத்தரவு கேரள மாநிலத்தை முன்மாதிரியாக திகழ செய்கிறது என்று தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Once again, Kerala sets a model for the nation. Menstrual and maternity leaves will be granted to female students of all institutions under our Department of Higher Education, reaffirming LDF Government's commitment to realising a gender just society.@unwomenchief @UN_Women
— Pinarayi Vijayan (@pinarayivijayan) January 19, 2023