பஞ்சாப் மொகாலி மாவட்டத்திலுள்ள தேராபஸ்ஸி பகுதியில் வசித்து வருபவர் துவாரகா தாஸ்(88). இவர் மகா சங்கராந்தியை முன்னிட்டு நடைபெற்ற பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி இருக்கிறார். அப்போது அவருக்கு ரூ.5 கோடி பரிசு விழுந்து உள்ளது. இதையடுத்து பரிசு தொகையில் வரிபிடித்தம் போக ரூபாய.3.5 கோடி அவருக்கு கிடைக்கும்.
இந்நிலையில் பரிசு கிடைத்தது பற்றி துவாரகா தாஸ் கூறியிருப்பதாவது “ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் எனும் நம்பிக்கையில் நான் மாதந்தோறும் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன். அப்பணத்தை தற்போது என் குடும்பத்தினர் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள். நான் எனது வாழ்நாள் முழுவதும் நிறைய வேலை செய்தேன். எனினும் எந்த தவறும் செய்யவில்லை” என்று அவர் கூறினார்.