திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமமூர்த்தி தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திசையன்விளையில் இருக்கும் ஹோட்டல்கள், துரித உணவு கடைகள், குளிர்பான கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டல்களில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன், 2 கிலோ நூடுல்ஸ், அஜினோமோட்டோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று கெட்டுப் போன உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.