தமிழகத்தில் இன்று கனமழை காரணமாக 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இன்று புதுச்சேரியிலும் பள்ளி கல்லூரிகளுக்கு ‌ விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் தர்மபுரி, ராமநாதபுரம், கடலூர், சிவகங்கை, மயிலாடுதுறை, சேலம், திருவாரூர், விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதேபோன்று தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் இரண்டுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.