தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அரசின் எந்தவித நலத்திட்டங்களை பெறாத குடும்பத் தலைவிகளுக்கு இனி மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இதன் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் பயனடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.