
வேலூர் மாவட்டத்தில் உள்ள சங்கரன் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டாக்டராக வேலை பார்க்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். நேற்று முன்தினம் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் கையில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் வீட்டு படுக்கை அறையில் பேச்சு மூச்சின்றி கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மணிகண்டனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் மணிகண்டன் விஷம் கலந்த குளுக்கோசை உடலில் ஏற்றி தற்கொலை செய்தது தெரியவந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.