உத்தரபிரதேசத்தின் கால்நடை மற்றும் பால்வள மேம்பாட்டு அமைச்சர் தரம்பால் சிங் தற்போது குப்பையில் இருந்து தங்கத்தை உருவாக்கும் மிஷினை தயாரிக்க இருப்பதாக சொன்ன விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது மீரட்டில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், “வடிகால்களில் உள்ள குப்பைகளைத் தங்கமாக மாற்றும் இயந்திரம் உருவாக்கப்படும்” என கூறியதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. “கூடா (குப்பை) → காஞ்சன் (செல்வம்/தங்கம்)” என்ற அவரது விளக்கம், மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சமூக வலைதளத்தில் வீடியோவை பகிர்ந்து, கடுமையாக விமர்சித்துள்ளார். “இவளவு பெரிய பேச்சுகளுக்கு முன்பு, கன்னோஜில் உள்ள பழைய பசும்பால் ஆலையை இயக்கவும், பசுமை வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் செய்யுங்கள்” என்று கிண்டலாகத் தாக்கியுள்ளார். மேலும், “பாஜகவில் யார் மிக பெரிய கற்பனை கூற்றுகளை சொல்கிறார்கள் என போட்டி நடக்கிறது போல” என்றும் கூறியுள்ளார்.

 

இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் குழப்பமும் விமர்சனமும் உருவாக்கியுள்ளது. குப்பையை மாற்றும் தொழில்நுட்பம் குறித்து அரசு திட்டமிட்டிருந்தாலும், அமைச்சர் அளித்த தகவல் வழங்கும் முறை சரியாக இல்லாததால், அது ஒரு அரசியல் விவாதமாக மாறியுள்ளது. இது போன்ற சம்பவங்கள், அமைச்சர்கள் பொது இடங்களில் பேச்சுகள் அளிக்கும்போது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.