தமிழ்நாடு மின்சாரக் கொள்கை 2019 க்கு இணங்க, பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 2026 டிசம்பர் 31 ஆம் தேதி வரை 100% வரி விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரி விதிப்புச் சட்டம் 1974 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி பேட்டரி வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.