கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் கொரோனா படிப்படியாக குறைந்ததால் கடந்த வருடம் மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடத்திற்கு எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்று மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். எழுத்துத்தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. குரூப் 4 தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கடந்த செப்டம்பர் மாதத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதன் காரணமாக 2023 ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அந்த தேர்வுக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது குரூப்-4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குரூப் 4 தேர்வு கட் ஆப் மதிப்பெண் கணிசமான அளவில் குறையும் என்றும் இந்த தேர்வுக்கான முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.