2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாநில அளவில் தொழு நோய் ஒழிக்க தொண்டாற்றி வரும் தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தொழுநோயை பொறுத்தவரையிலும் அன்னை தெரசாவின் அர்ப்பணிப்பை தவிர்த்துவிட்டு, வேறொருவரின் அர்ப்பணிப்பை முதன்மைப்படுத்த முடியாது என்று கூறினார்.