சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சமீப காலமாக அதாவது மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறிகளின் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேப்போன்று ஒரு கிலோ தக்காளி பழம் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் மழையின் தீவிரம் குறைந்ததால் காய்கறிகளின் விலை சரிந்ததாக வியாபாரிகள் கூறியுள்ளனர். அதன் பிறகு பீன்ஸ், கேரட் மற்றும் அவரைக்காய் போன்றவைகள் தலா ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் கத்திரிக்காய் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் காய்கறிகளின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குறைந்தது இல்லத்தரசிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது..