![](https://www.seithisolai.com/wp-content/uploads/2024/12/9869_4_12_2024_21_1_6_1_WHATSAPPIMAGE2024_12_04AT71659PM.jpg)
தமிழகத்தில் உள்ள 136 சிறைகளில் சுமார் 20,000 கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக் கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்காக அதிகாரிகளால் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு சிறை கைதிகளுக்கு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதில் சிறை கைதிகள் தங்களது குடும்ப உறுப்பினர்களிடம் வசதியாக பேச கம்ப்யூட்டரில் வீடியோ கால் மூலம் மூலம் பேச புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக தமிழக அரசு சேலம்,கோவை மாவட்டங்களில் முதலில் 126 கம்ப்யூட்டர்களை வாங்கி சிறை கைதிகளின் அறைகளின் அருகில் பொருத்தியுள்ளது. இதன்படி மூன்று நாட்களுக்கு ஒரு முறை 12 நிமிடங்கள் கைதிகள் தங்களது உறவினர்களுடன் பேசலாம். இதற்கு 1 நிமிடத்திற்கு 2.25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சிறைகளாக இந்த நடைமுறையை தமிழக அரசு கொண்டுவர உள்ளது.