கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக பசுவராஜ் பொம்மை இருக்கிறார். இந்த மாநிலத்திற்கு இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வர இருக்கும் நிலையில் தற்போதே பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக மாநிலத்தில் மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ. 2000 வழங்கப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பாக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.