தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்படும் குஜராத் பெண் கிருத்திகா கேரளாவில் உள்ள அவரது உறவினர் ஹரிஸுடன்  செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித். இளம் பட்டதாரியான இவருக்கு இதே பகுதியில் வசித்து வந்த குஜராத்தை சேர்ந்த கிருத்திகா பட்டேல் என்ற பெண்ணின் மீது காதல் ஏற்படுகிறது. இந்த காதலுக்கு கிருத்திகா வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கிருத்திகாவும், வினித்தும் சேர்ந்து வழக்கறிஞர் உதவியுடன் சுய திருமணம் செய்து கொள்கின்றனர். இந்நிலையில் தான் காவல்துறை விசாரணைக்கு குற்றாலத்துக்கு வருகின்ற போது பெண்ணின் உறவினர் வினீத்தை தாக்கிவிட்டு பெண்ணை கடத்தியதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

இது சம்பந்தமாக குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சூழலில் தனது காதல் மனைவியை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று கூறி வினித் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த ஆட்கொணர்வு மனுவில் கிருத்திகாவை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவுபிறப்பித்திருந்தனர். குஜராத்திலிருந்து வந்து ஆஜரான கிருத்திகா என்னை யாரும் கடத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரில் தனது தோழியுடன் சென்றதாக கூறினார். ஆனால் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..

ஏனென்றால் கிருத்திகாவுக்கும் குஜராத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடந்ததாக கூறப்படுகின்றன. இந்த வினித் என்பவர் உடன் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வைரலாகிறது. எனவே இவரிடம் முறையான விசாரணை செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என நீதிபதிகளிடம் வேண்டுகோள் வைத்திருந்தனர். இதனை தொடர்ந்து கிருத்திகாவை பெற்றோர்கள்  தரப்பில் அனுப்ப மறுத்த நீதிபதிகள் தனியார் காப்பகத்திற்கு 3 நாள் அனுப்பியிருந்தனர். மேலும் காவல்துறையினர் அவரிடம் ரகசிய வாக்குமூலங்கள் பெறலாம். தேவைப்படும் பட்சத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

அதனை தொடர்ந்து கடந்த வாரம் கிருத்திகாவிடம் 161 என்று செல்லக்கூடிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 164 என்று சொல்லக்கூடிய கீழமை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.  இரண்டு வாக்குமூலத்திலும் கிருத்திகா படேல் தன் காதலித்தது உண்மை தான். ஆனால் குஜராத்தை சேர்ந்த வாலிபருடன்  திருமணம் நடைபெற்றது என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து இந்த பெண்ணை யாருடன் அனுப்புவது என்பது குறித்து நீதிமன்றத்திற்கு குழப்பம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து தான் கிருத்திகாவுடையை பெற்றோர்கள் தலைமறைவாக  இருப்பதால் புதிதாக உறவினர்கள் யாரேனும் மனு தாக்கல் செய்தால் அவர்களிடம் உறுதிமொழி பத்திரம் பெற்று அனுப்பலாம் என தெரிவித்தது..

அதனை தொடர்ந்து கிருத்திகாவின் தாத்தா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கிருத்திகா தாத்தாவுடன் செல்ல விருப்பம் தெரிவிக்கிறாரா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக  நீதிமன்றத்தில் 2:15 மணிக்கு ஆச்சரியப்படுத்த நீதிபதிகள் உத்திரவு பிறப்பித்தனர். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான கிருத்திகா பட்டேல் தனது தாத்தாவுடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். ஆனால் காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கில் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதற்கு இவர்கள் தாத்தா உதவி செய்தார்கள். எனவே குற்றவாளிகளுடன் செல்ல அனுமதிக்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் கிருத்திகாவை  நேரில் அழைத்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது தனது அப்பா வழி உறவான மாமாவுடன் செல்வதாக விருப்பம் தெரிவித்தார். அதனை எழுத்துப்பூர்வமாக எங்கள் முன்னால் எழுதிக் கொடுத்தால் உங்கள் மாமாவோடு அனுப்புவோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கிருத்திகா நீதிபதிகள் முன்னாள் மாமா ஹரிஷ் உடன் செல்வதாக எழுத்து பூர்வமாக கடிதம் எழுதி தாக்கல் செய்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவருடைய அப்பா வழி  உறவினரான மாமாவுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விசாரணையின் போது கிருத்திகாவை காதல் திருமணம் செய்து கொண்ட வினித்தும் வந்திருந்தார். ஆனால் அவர் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அவர் ஆவலோடு காத்திருந்தார். தனது மனைவி தன்னுடன் வருவார் என்று. ஆனால் அதனை மறுத்து உறவினுடன் செல்வதாக  தெரிவித்ததை தொடர்ந்து வினித் மிகுந்த ஏமாற்றத்துடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். மேலும் நீதிமன்றம் கிருத்திகா பட்டேல் விசாரணைக்கு முறையாக ஆஜராகி முழு ஒத்துழைப்பு தர வேண்டும். கிருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம். கிருத்திகா யாருடன் செல்கிறாரோ அவரே கிருத்திகா படேலின் பாதுகாப்புக்கு பொறுப்பு ஆவார் என்றும், மாரியப்பன் வினித் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது.