தற்போது சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் சிறுவன் ஒருவன் தன் தாயின் உயிரை உரிய நேரத்தில் காப்பாற்றியுள்ளான். அந்த வைரல் வீடியோவில் பெண் ஏணியில் ஏறியிருப்பதை காணலாம். அப்போது திடீரென அந்த ஏணி கீழே விழுந்து விடுகிறது. இதனால் அப்பெண் அங்கிருந்த கம்பியை பிடித்துக் கொண்டு தனியாக காற்றில் தொங்கி கொண்டிருக்கிறார்.

இதை பார்த்த சிறுவன் தன் தாயை காப்பாற்ற ஏணியை மீண்டுமாக எடுத்து முடிந்த அளவு முயற்சி செய்து மேலே போடுகிறான். இதன் காரணமாக சுதாரித்துக்கொண்ட அவரது தாய் அதை பிடித்து கீழே இறங்கி விடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.