உத்திரபிரதேசத்தில் இன்று காலை நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது மிர்சாபூர் பகுதியில் டிராக்டர் சென்று கொண்டிருந்தது. இந்த டிராக்டரில் 13 கூலி தொழிலாளிகள் இருந்த நிலையில் வாரணாசி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த லாரி ஒன்று திடீரென டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 10 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.