ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டம் கங்கவரம் அருகே பேருந்து கவிழ்ந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதிக்கு சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் நின்ற லாரி மீது பேருந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

6  பேர் படுகாயம் அடைந்தனர். 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.