தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழ்நாட்டில் கார்த்திகை தீப திருநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சங்க காலத்தில் கார்த்திகை தீப திருநாளில் தீபம் ஏற்றுவது தமிழர்களின் மரபாக அறியப்படுகிறது. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் கார்த்திகை தீபம் தொடர்பான குறிப்பு உள்ளது. மேலும் திருஞானசம்பந்தர் பூம்பாவை பதிகத்தில் கார்த்திகை தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

பழமொழி, நானூறில் வரும் குன்றின் மேலிட்ட விளக்கு என்பதும் கார்த்திகை தீபத்தையே குறிக்கிறது. கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அண்ணாமலையாலும் உண்ணாமலை அம்மனும் அர்த்தநாரீஸ்வரர்களாக ஆனந்த தாண்டவம் ஆடி 6 மணிக்கு காட்சி தருவார்கள்.

கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலை மகா தீபத்திற்கு முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. மாலை 6.05 மணிக்குள் மலை மேல் மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு வீட்டில் விளக்கு ஏற்றி அண்ணாமலையாரை வழிபடலாம். இந்த நிலையில் கார்த்திகை விளக்கை சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி ஒரு பெண் இன்ஸ்டாகிராமில் ஒரு சில டிப்ஸ் கூறியுள்ளார். அந்த வீடியோ இதோ…