உத்தர பிரதேஷ் மாநிலம் அக்பர்பூர் கிராமத்தை சேர்ந்த சந்து என்கிற புரா என்ற இளைஞர் புர்கா அணிந்தவாறு தனது காதலியை சந்திக்க சென்றுள்ளார் ஆனால் இவர் புர்கா அணிந்து கொண்டு நடந்து சென்றதைப் பார்த்த சிலர் இவர் மீது சந்தேகம் கொண்டு பின்தொடர்ந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வழிமறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சந்து தனது முகத்தை காட்ட மறுத்துள்ளார். ஆனால் அவரை சுற்றி நின்ற கூட்டம் வலுக்கட்டாயமாக அவரது முகத்திரையை விளக்கச் செய்து அவர் ஒரு ஆண் என்பதை அடையாளம் கண்டு கொண்டது.

முதலில் அவர் குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்று நினைத்த கும்பல் அவரது ஆதார் அட்டையை கேட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது என்னிடம் ஆதார் அட்டை இல்லை எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் மீது தாக்குதல் மேற்கொண்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தனது காதலியை சந்திக்க மாறுவேடத்தில் சென்றதாக ஒப்புக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.