பீகார் ரோஹ்தாஸ் மாவட்டத்திலுள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர்.
இதுகுறித்த வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதோடு அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டா எனவும் அதனுடைய நம்பகத்தன்மையை கண்டறியவும் அவற்றை வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.