காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று 75 வயதில் உடல் நலக்குறைவினால் காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி முதல்வர் ஸ்டாலின், தமிழிசை சௌந்தரராஜன், திருமாவளவன், செல்வப் பெருந்தகை உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, காங்கிரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம் என பதிவிட்டுள்ளார்.