கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று சிவகுமார், கதிரவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அய்யாசாமி மற்றும் தெய்வரா ஆகிய இருவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக சிவக்குமார் (40), கதிவரன் (30) ஆகிய இரண்டு பேரை கைது செய்த நிலையில் தற்போது அவர்களது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கள்ளச்சாராயம்  விற்பனை செய்ததாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.