கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் அருந்தி 38 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ள சாராயம் அருந்தி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.