உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள மொரதாபாத் பகுதியில் ஒரு கார் ஒன்று வேகமாக பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த காரின் பேனட்டின் மீது வாலிபர் ஒருவர் தொங்கியபடி சென்றார். இவருடைய பெயர் சமீர். இவருடைய மனைவியை அந்த காரில் வைத்து மஹீர் என்பவர் எங்கேயோ அழைத்துச் செல்ல முயன்றுள்ளார்.

அதனால்தான் கார் பேனட்டில் தொங்கியபடிஅவர்களை விரட்டி பிடிக்க முயன்றார். இது தொடர்பாக  சமீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி மஹீரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில் மஹீர் மற்றும் சமீரின் மனைவி இருவரும் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.