திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ராஜகோபால் நகரில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஜெய்ஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் ரவுடி பட்டியலிலும் இருக்கிறார். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி கிஷோருடன் சேர்ந்து அவருடைய நண்பர் வீட்டுக்கு ஜெய் ஸ்ரீ சென்றுள்ளார். அப்போது திடீரென ஜெய் ஸ்ரீ மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவ நாளில் கிஷோர் மற்றும் ஜெய்ஸ்ரீ இருவரும் மாடியில் நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஜெய் ஸ்ரீ கிஷோரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் எனக்கு ஒரு வேலை கிடைக்கட்டும். நீயும் கல்லூரி படிப்பை முடித்துவிடு. அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்து ஜெய் ஸ்ரீ திடீரென மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாதாக கிஷோர் கூறியுள்ளார். மேலும் காதலியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கிஷோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.