தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் தன் முரட்டுக் குறட்டை ஒலியை, கீபேடில் கிழிந்து தொங்கும் ஒரு பிழையங்கமாக வெளியிட்டுள்ளது முரசொலி. தீயசக்தி திமுகவின் தீப்பிடித்துக் கருகிய வாசனையில் எழும் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கிறது, தலையங்கம் என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள முரசொலியின் ஜனநாயகக் கொலையங்கம்.

த.வெ.க. தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு உறுதி என்று அறிவித்த பின்னரும் தன் குழப்பக் குளறுபடி வேலையைக் காட்டியது முரசொலி. தன் கோழைத்தனக் கோழிமூட்டல் குழிக்குள் தள்ளப்பட்டுப் புதைக்கப்பட்டதால், கயமைத்தனம் கவிழ்ந்துபோன இயலாமையில், முட்டாள்தனமாக மூக்குச் சிந்தி அழுது வடிந்துள்ளது.

 

மக்கள் விரும்பும் த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழும் என்று நப்பாசையில் கூறி, தன் அற்ப ஆசையை வெளியிட்டு, தன் பின்னணியில் இருப்பது யார் என்பது அம்பலப்பட்டு, தன் முகமூடியைத் தானே கிழித்துக்கொண்டுள்ளது, முரசொலி என்னும் முட்டாள் சொதப்பல் ஒலி.

கொளத்தூரிலேயே கவிழ்ந்து, நட்டு போல்ட்டு எல்லாம் கழன்று போய், கலகலத்துக் கிடக்கிறது திமுக. இந்த லட்சணத்தில் கவிழும் கவிழும் என்று கத்தி, தானே தலைகுப்புறக் கவிழ்ந்து, மூக்குடைந்து, முக்கால்வாசி மண்டை உடைந்து, மண்ணைக் கவ்விக் கிடக்கிறது திமுக. இந்நிலையில், லஞ்ச ஊழலற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நிர்வாகத்தால், இற்றுப் போன தன் அரசியல் கொள்ளைச் சூத்திரம் இன்னும் சுக்குநூறாகிப் போய்விட்டதே எனும் விரக்தியில் வெடித்து அழுது, தன் திருட்டுத் தீட்டொலியைக் கொட்டி முழக்கி உள்ளது முரசொலி.

இப்படியே போனால், கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி, மூன்றாவது பிள்ளையைப் போலவே முட்டுச் சந்தில் விழிபிதுங்கி நிற்கும் என்று பதிவிடப்பட்டுள்ளது.