தோல்வி பயத்தில் கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி விமர்சித்துள்ளார். கச்சத்தீவு குறித்த மோடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அவர், கச்சத்தீவை கொடுக்கக் கூடாது என்று கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழகம் முழுவதும் கூட்டம் நடத்தினார்.

தமிழ் இனத்தை அழித்த இலங்கை திவாலான போது 34,000 கோடி கொடுத்த மோடி கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? என கேள்வி எழுப்பி உள்ளார்.