கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மகள் கரோலின் மல்ரோனி X தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கனடா அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான இவர், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி தீவிர போராட்டம் நடத்தியிருக்கிறார். இவரது மறைவிற்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.