கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து சீனாவில் மீண்டுமாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதனால் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் XXB.1.5 எனும் ஒமிக்ரான் உருமாறிய கொரோனா தொற்றானது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில் சீனாவில் கொரோனா பாதிப்புக்கு நாளொன்றுக்கு 9,000 பேர் உயிரிழந்ததாக இங்கிலாந்தை சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் ஒரு லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருப்பதாகவும், 1.86 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.