பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற தொடரின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. இதைத்தொடர்ந்து அவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான சீதாராமன் என்ற தொடரில் நடித்தார். ஆனால் அவருக்கு அப்போது திருமணம் நடைபெற்றதால் அந்த தொடரில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளன் தமயந்தி தொடரில் நடித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் திடீரென instagram-ல் கணவுருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பிரியங்கா நீக்கினார்.
இதனால் பிரியங்கா நல்காரி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டதாக இணையதளங்களில் தகவல்கள் பரவியது. இதற்கு அவர் எந்தவித விளக்கமும் அளிக்காமல் இருந்த நிலையில் தற்போது ஒரு போட்டோவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது நேற்று தன்னுடைய பிறந்தநாளை கணவருடன் சேர்ந்து கொண்டாடும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகை பிரியங்கா வெளியிட்டுள்ளார். மேலும் இதன் மூலம் அவர் கணவரை விவாகரத்து செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது.