கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான  அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை ஊக்குவிக்க RBI இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.