சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும் விற்பனை ஆகிறது.

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை சரமாரியாக அதிகரித்து வந்து, சமீபத்தில் ரூ.55,000-ஐ கடந்து விற்பனை ஆனது. கடந்த வாரம் அட்சய திருதியையொட்டி விலை ஒரே நாளில் ரூ.1,000 வரை அதிகரித்தது.