இந்தியாவைச் சேர்ந்த 2 முக்கிய புள்ளிகள் ஒரே நாளில் அடுத்தடுத்து தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒரே நாளில் பெரிய நிறுவனங்களின் பொறுப்பில் இருந்த இரு இந்தியர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
அதன்படி xiaomi நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் முரளி கிருஷ்ணன் தன் பதவியை ராஜினாமா செய்த நிலையில், Paytm நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி ஸ்ரேயஸ் சீனிவாசன் அவர்களும் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதில் முரளி கிருஷ்ணன் பிசினஸ் பட்டப்படிப்பில் டாக்டரேட் பட்டம் பெறுவதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.